வவு- பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

breaking
வவு- பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு சனிக்கிழமை (22) காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார்.-வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவை தொடர்பில் ஆராய்வதற்காக அவர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது உணவகம், நோயாளர் விடுதி,சமயல்அறை, மருந்தகம்,வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட அவர் அங்கு காணப்பட்ட சில குறைப்பாடுகள் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா வைத்திய சாலை தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் தினங்களில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்களை இணைத்து கொண்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.