பேரினவாத சிங்களத்தின் உண்மை மனோ நிலையை வெளிச்சம் காட்டும் விக்கி

breaking
  தமிழ் மக்­கள் தமது உரி­மை­க­ளைக் கேட்­டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்­கள் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்­கள். இத­னால்த்­தான் எம் தலை­வர்­கள் எமக்­கேன் இந்த வம்பு? என்று ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­குள் அகப்­பட்டு நிற்­கின்­றார்கள். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். சிப்­பிக்­குள் முத்து நூல் வெளி­யீட்டு விழா கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர் ஒரு பத்­தி­ரி­கைச் செய்தி வாசித்­தேன். இன்று வடக்­கில் செயற்­ப­டும் ஆவாக்­குழு உறுப்­பி­னர்­கள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரின் முன்­னாள் புலி உறுப்­பி­னர்­களே. விடு­த­லைப்­பு­லி­க­ளின் சிந்­தனை, இன­வா­தம் மற்­றும் ஈழப் பிரி­வினை வாதத்தை அவர் அங்­குள்ள இளை­யோர் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார், என்று பொது எதி­ரணி உறுப்­பி­னர் ஒரு­வர் கூறி­ய­தா­கச் செய்­தி­யைக் கண்­டேன். இதன் தாற்­ப­ரி­யம் என்ன? தமிழ் மக்­கள் தமது உரி­மை­களை, உரித்­துக்­களை, தன்­மா­னத்தை எப்­பொ­ழுது வலி­யு­றுத்­தப் பார்க்­கின்­றார்­களோ அப்­போது அவ்­வா­றான காரி­யங்­க­ளில் ஈடு­ப­டு­வோர்­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் என்றோ, பயங்­க­ர­வா­தி­கள் என்றோ, புலி­கள் என்றோ, வன்­மு­றை­யைத் தூண்டி விடு­ப­வர்­கள் என்றோ, நாட்­டைப் பிரிப்­ப­வர்­கள் என்றோ அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அவர்­க­ளைப் பின்­வாங்க வைத்­து­வி­டு­வார்­கள். இதற்­குப் பயந்தே எமது தமிழ்த் தலை­வர்­கள் பெரும்­பான்­மை­யி­னர் தரு­வ­தா­கக் கூறும் அர­சி­யல் தீர்­வு­க­ளுக்­குச் சம்­ம­தம் தெரி­வித்து வரு­கின்­ற­னர். பிரச்சினை எமது, பாதிக்­கப்­பட்­டோர் நாங்­கள், எமது வருங்­கா­லமே எமது கரி­சனை ஆனால் தீர்­வா­னது தம்­மால்த்­தான் தரப்­பட வேண்­டும் என்ற மனோ­நி­லை­யில் பெரும்­பான்­மை­யி­னர் இருக்­கின்­றார்­கள். சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆள வேண்­டும் என்ற எண்­ணங்­க­ளி­லி­ருந்து இன்­றும் மாற­வில்லை. தம்மை மாற்­றவோ, உண்­மையை உண­ரவோ, உலக நாடு­க­ளின் மனித உரி­மைக் கோட்­பா­டு­களை மதிக்­கவோ அவர்­கள் இப்­பொ­ழு­தும் தயா­ரில்லை. மனி­தப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கப்­ப­டாது என்­பதே எமது அரச தலை­வ­ரின் திட­மான எதிர்­பார்ப்பு. அதா­வது இந்த நாடு எங்­க­ளு­டை­யது. சிறு­பான்­மை­யி­னர் வந்­தேறு குடி­கள். மரத்­தைச் சுற்றி வள­ரும் கொடி­கள் போன்று எமக்கு அனு­ச­ர­ணை­யாக சிறு­பான்­மை­யி­னர் இந்த நாட்­டில் வாழ வேண்­டுமே ஒளிய தமக்­கென உரித்­துக்­கள் எவற்­றை­யும் பெற எத்­த­னிக்­கப்­ப­டாது என்­பதே அவர்­கள் கருத்து என்­றார்.