கோத்தா தேர்தலில் போட்டியிடுவதை எதிர்க்கும் குமார் வெல்கம

breaking
  அமெரிக்க நாட்டு பிரஜை ஒருவருக்கு இந்த நாட்டில் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கு முன்வர முடியாதெனவும் அவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதில் எந்ததொரு பிரயோசனமும் இல்லையெனவும் கூட்டு எதிரணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவாரென நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தான் விரும்பும் ஒருவரென்றால் அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத்திரம் தான். அவர் குடும்ப ஆட்சிக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். ஆகையால் அடுத்த நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த போட்டியிடுவதற்கு எந்ததொரு தடையுமில்லை. அவர் வேட்பு மனு தாக்கல் செய்கின்றபோது அதனை தேர்தல் ஆணையாளர்க்கு எவ்விதத்திலும் நிராகரிக்க முடியாதெனவும் குமார வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.