வெய்யதுயர் சுமந்தவெங்கள் திலீபனையே வணங்குகின்றோம்.!

breaking
தெய்வத்தின் முற்றத்தில் தெய்வீகம் வளர்ப்பதற்காய் மெய்வருத்தித் தியாகத்தின் மேனிலையில் வீற்றிருந்து கையமர்த்தி மக்களுக்கோ தெளிவுரைகள் வழங்கியவன் வெய்யதுயர் சுமந்தவெங்கள் திப்பனையே வணங்குகின்றோம் தன்னினத்தின் விடுதலைக்காய் தன்னிலத்தை அறுத்தெறிந்து தன்மானம் காப்பதற்காய் தலைவனுரை சுமந்துநின்று என்னாளும் சோர்வகற்றிச் சொற்பெருக்கால் மக்களுள்ளம் தன்னாட்சிக் குறுதுணையாய் கவர்ந்தெடுத்த செயல் வீரன் சிங்களத்தின் கொடுஞ் செயலல் கொதித்தெழுந்த தலைவனது வெங்களத்து விரனெனச் கழன்றோடிக் கைகொடுத்தான் அங்கம் சிலீர்க்க வைக்கும் தியாகத்தின் வேள்வியிலே மங்காத புகழேந்தி திலீபனெமைக் காத்தானே கற்றபெருந் தலைவரெலாம் கவலையற்றுச் செயலிழந்தார் அற்ப சொற்ப சலுகை பெற்று அடிமைகளாயுடல் கமந்தார் கற்றுயர்ந்தும் தற்பெருமை கொள்ளாத திலீபன் எங்கள் கொற்றவனின் இலட்சியத்துக் குயிரளித்துத் தேவணணன் மேடைகளிற் பொழிந்திடுவர் செயலிலதைக் கைநெகிழ்வார் பாடைகட்டித் தமிழினத்தை வேகவைத்த அரசினுக்கு சாடையாகச் சாய்ந்தவற்றால் வாழ்வின் ககம் அனுபவிப்பார் படையெலாம் சுமந்து நின்று திலீபனெமைக் காத்தானே . கவியாக்கம் :மாரீசன் வெளியீடு :ஈழநாதம் (26.09.2004) மீள் வெளியீடு :தாரகம் இணையம்  முதல் இணைய தட்டச்சு  உரிமை :தாரகம் இணையம்