ஶ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தலமையகம் முன் ஆர்ப்பாட்டம்

breaking
  ஶ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எதிர்ப்பு தெரி­வித்து நியூ­யோர்க்­கி­லுள்ள ஐ.நா. தலை­மை­யகம் முன்­பாக இன்று 25 ஆம் திகதி புலம்­பெ­யர்ந்த தமிழ் அமைப்­ பி­னரால் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­ப­ட­வுள்ளது. இன்­றைய தினம் அமெ­ரிக்க நேரப்­படி நண்­பகல் 12 மணி­முதல் பிற்­பகல் 2 மணி­வரை இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யுத்­தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கு நீதி­கோ­ரியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எதிர்ப்புத் தெரி­வித்­துமே இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெ­ற­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் அறி­வித்­துள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக கன­டாவில் இருந்தும் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் நியூ­யோர்க்­கிற்கு வருகை தர­வுள்­ளனர். இதற்­காக டொரன்டோ நக­ரி­லி­ருந்து விசேட பஸ் சேவை­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான உயர்­மட்­டக்­ குழு ஐ.நா. பொதுச்­ச­பைக்­ கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக நியூயோர்க் சென்­றுள்­ளது. பொதுச்­ச­பைக்­ கூட்­டத்தில் ஜனா­தி­பதி உரை­யாற்­ற­வு­முள்ளார். இந்த வேளையிலேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பினரால் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.