ஶ்ரீலங்கா ஊடகங்கள் பொய் கூறுகின்றன: கொதிக்கும் மகிந்த

breaking
  அரச தலை­வர் தேர்­த­லில் தனது மகன் நாமல் ராஜ­பக்ச போட்­டி­யி­டு­வ­தற்கு வயது போத­வில்லை என்று, இந்­திய ஊட­கங்­க­ளுக்கு தாம் கூறி­ய­தாக ஶ்ரீலங்காவிலுள்ள  ஊட­கங்­க­ளில் பொய்­யான செய்­தி­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன என்று முன்­னாள் ஶ்ரீலங்கா அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார். அண்­மைய இந்­தி­யப் பய­ணம் தொடர்­பாக, கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி­லேயே அவர் இது­பற்றிக் கூறி­யுள்­ளார். நாமல் ராஜ­பக்­ச­அ­ரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு, வயது போதாது என்று மகிந்த ராஜ­பக்ச கூறி­யி­ருந்த கருத்தை முன்­வைத்து, வயது போது­மா­ன­தாக இருந்­தி­ருந்­தால், அவரே அர­ச­த­லை­வர் வேட்­பா­ளர் என்று கூற முற்­ப­டு­கி­றீர்­களா என்று கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. அதற்­குப் பதி­ல­ளித்­துள்ள மகிந்த ராஜ­பக்ச,”நாம­லுக்கு 35 வயது பூர்த்­தி­யா­கா­த­ தால், அவர் அர­ச­த­லை­வர் தேர்­த­லில் கள­மி­றங்க முடி­யாது என்று நான் இந்­திய ஊட­கங்­க­ளி­டம் கூறி­ய­தாக இலங்கை ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அது முற்­றி­லும் பொய். உங்­க­ளின் குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வர் அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­வாரா என்று இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். எனது சகோ­த­ரர்­கள் போட்­டி­யி­டு­வ­தற்கு எந்­தத் தடை­யும் இல்லை என்று நான் பதி­ல­ளித்­தி­ருந்­தேன். கட்­டா­ய­மாக எனது சகோ­த­ரர்­க­ளைக் கள­மி­றக்­கு­வேன் என்று நான் ஒரு­போ­தும் கூற­வில்லை. இந்­திய ஊட­கங்­க­ளி­டம் நான் கூறிய கருத்தை இங்­குள்ள சில ஊட­கங்­க­ளும், சமூக ஊட­கங்­க­ளும், திரித்து வெளி­யிட்­டுள்­ளன” என்று குறிப்­பிட்­டுள்­ளார். எனி­னும், மகிந்த ராஜ­பக்ச ‘தி ஹிந்து’ நாளி­த­ழுக்கு அளித்­தி­ருந்த செவ்­வி­யின் கடைசி கேள்­விக்­குப் பதி­ல­ளித்த போது, “எனது மகன் ( நாமல் ராஜ­பக்ச) அரச தலை­வர் வேட்­பா­ள­ராக முடி­யாது. அவர்­கள் குறைந்­த­பட்ச வய­தெல்­லையை, 30 இல் இருந்து இப்­போது 35 ஆக அதி­க­ரித்­தி­ருக்­கி­றார்­கள். எனவே 2019இல் அவ­ரைக் கருத்­தில் கொள்ள முடி­யாது. எனது சகோ­த­ரர் நிச்­ச­யம் ஒரு போட்­டி­யா­ள­ராக இருப்­பார். ஆனால், கட்சி மற்­றும் கூட்­டணி தான் யார் என்­பதை முடிவு செய்­யும்” என்று மகிந்த ராஜ­பக்ச கூறி­யி­ருந்­தார். மகிந்த ராஜ­பக்­ச­வின் நெருங்­கிய நண்­ப­ரான சுப்­ர­ம­ணி­யன் சுவா­மி­யின் மக­ளான சுஹா­சினி ஹைதரே, மகிந்த ராஜ­பக்­சவை ‘தி ஹிந்து’ நாளி­த­ழுக்­காக செவ்வி கண்­டி­ருந்­தார் என்­ப­தும், அந்­தச் செவ்­விக்கு அவர் மறுப்­புத் தெரி­விக்­க­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.