ஶ்ரீலங்கா காவல்துறையால் யாழில் அறுவர் கைது அவர்களில் ஒருவர் பெண்

breaking
  யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் மானிப்பாய் ஆகிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) சுற்றிவளைப்பினை காவல்துறையினர் மேற்கொண்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரும், வீடுகளை உடைத்து நகை பணம் என்பவற்றை கொள்ளையடித்த குற்ற சாட்டில் கோண்டாவில் மற்றும் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை சுன்னாக காவல்துறையினரும், பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த குற்றசாட்டில் கற்கோவளம் பகுதியை சேர்ந்த ஒருவரை வல்வெட்டித்துறை காவல்துறையினரும் , வல்லிபுர ஆழ்வார் கோவில் சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவரை பருத்தித்துறை காவல்துறையினரும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து காவலவ்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.