பேருந்தினில் கொண்டு சென்ற கஞ்சா வவுனியா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது

breaking
  வவு­னி­யா­வில் நேற்­றுக் காலை 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று காவல்துறையினர் தெரி­வித்­த­னர். அதை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிப் பய­ணித்த பேருந்து ஒன்று நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் வவு­னியா, நொச்­சி­மோட்­டைப் பாலத்­துக்கு அண்­மை­யில் வவு­னியா காவல்துறை நிலை­யப் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வால் சோத­னை­யி­டப்­பட்­டது. அதன்­போது கஞ்சா கைப்­பற்­றப்­பட்­ட­து­டன், சந்­தே­க­ந­பர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கொழும்பு, மகி­யங்­க­னை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­ப­டுட்­டது. இது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன என்­றும், கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.