கடந்த ஆட்சிக் காலத்தில் கனவு கண்டவர் தற்போதைய ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள் என்கிறார்

breaking
  ஶ்ரீலங்காவில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தெளிவான திட்டமேதும் கிடையாது எனவும் அவர் வெறுமனே கனவு கண்டுகொண்டிருக்கிறார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் நேற்றையதினம் ,தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு முழவதிலும் பாதாள உலகக் குழுக்கள் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், வடக்கில் காணப்படும் ஆவா குழுவை, சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறான குழுக்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தற்போது தினந்தோறும் கொலைகள் இடம்பெறுகின்றன எனவும், தமது காலத்தில், இவை கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டன எனவும் தெரிவித்த மகிந்pத நாட்டில் தற்போது காணப்படும் இந்த நிலையைக் கட்டுப்படுத்த, இயலாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது என எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லுதல், பொருளாதாரத்தைப் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டதுடன் அதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.