காணிப்பிரச்சனைக்கு தீர்வு இல்லையேல் எங்கள் முடிவு பாரதூரமாக இருக்கும்!

breaking

எங்கள் பூர்வீக காணிகளுக்குள் எங்களை விடாதற்கு காரணம் என்ன? இந்த இடத்தை அரசியல் வாதிகள் யாரும் வாங்கி இருக்கின்றார்களா? அதனால் வனவரிபாலன சபை விடுகின்றார்கள் இல்லையா? அல்லது இந்த இடம்வாங்கிய அரசில் வாதி விடுகின்றார் இல்லையா? என்பது புரியாத புதிராக இருக்கின்றது எனவே எங்கள் காணிக்குள் எங்களை செல்வதற்கு அனுமதிக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் எங்கள் முடிவுக் பாரதூரமாக இருக்கும் என பொத்துவில் கனகர் கிராமம் 60 கட்டையில் நிலதீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளரிடம் தெரிவித்தனர்.

பொத்துவில் கனகர் கிராமம் 60 கட்டை பிரதேச மக்கள் யுத்ததினால் இடம்பெயர்து 28 வருடங்களாகிய நிலையில் அவர்களின் பூர்வீக காணியில் வனபரிபாலன திணைக்களம் கையடக்கியுள்ளது இதனை மீட்பதற்கான தொடர் நில மீட்பு போராட்டம் 42 நாட்களாக முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த போராட்ட இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் த.சுரேஷ;,மாவட்ட செயலாளர் கு.ஜெகநீதன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் க. சசிகரன் ஆகியோர் சென்று அவர்களை சந்தித்து கொடுப்பனவுகளை வழங்கியிருந்தனர் இதன்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

1960 ம் ஆண்டு காலம் தொடக்கம் வீடுகட்டி சேனைப்பயிர் செய்து 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தோம். அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. கனகரட்ணம் காலத்தில் 30 வீடுகட்டிகொடுத்தது , மற்றும் அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கின்றது.

இந்த நிலையில் 1985 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து இடம்பெயர்ந்திருந்தோம் பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் மீண்டும் மீள்வந்தோம் பின்னர் இடம்பெயர்தோம் இவ்வாறு கடைசியாக 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து கோமாரி தம்பிலுவில் திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் அகதிகளாக இருந்தோம்.

பின்னர் 1990 ம் ஆண்டு கடைசியில் மீண்டும் குடியமர வரும்போது வனபரிபாலன அதிகாரியினால் இந்த இடத்தில் இருக்க கூடாது அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளதாவும் அரசாங்கம் தரும்போது நீங்கள் வந்து இருக்கலாம் இப்போது செல்லமுடியாது என உறுதி தெரிவித்தனர்.

1993 ம் ஆண்டு மீளகுடியேற்றம் என்ற பேர்வையிpல் பொத்துவில் கொண்டு எங்களை ஆடுமாடுகள்போல அடைத்தனர் இதேவேளை 200 பேர்வரையிலான பிள்னைகளை காவு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது வெளியில் செல்லக் கூடிய வாய்வு இருக்கவில்லை.

இதன் பினனர் கடந்த இரண்டு வருடத்தின் பின்னர் மீண்டும் குடியமர வரும்போது இராணுவத்தினர் இதற்குரிய ஆதாரங்களை கொண்டுவாருங்கள் அதற்குரிய அதிகாரிகளுடன் கதைத்து பேசி இடத்தை தருவதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வனபரிபாலன அதிகாரி ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டுடபோது வனபரிபாலன அதிகாரி வரைபடத்தை காட்டி இது ஜனாதிபதி இந்த இடத்தை தருமாறு கோரியள்ளதாகவும் அதற்கினங்க ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கின்றோம். ஆனால் உங்கள் இடம் இருந்தால் அதனை தருவோம் என்றனர்.

ஏங்கள எமது காணிக்குள் போகவேண்டாம் என தடுத்த நிலையில் தெரிவித்துவிட்டு எங்கடை கடற்கரை காணிகளில் வனபரிபாலன திணைக்களம் பணக்காரர்களுக்கு எமது காணிகளை இடம்கொடுத்து அவர்கள் வேலிபோட்டு வீடுகட்டி கிணறு கட்டுகின்றார்கள் இதனை என்ன என்று கேட்கபோனால் அவர்கள் பணம் கெடுத்து வாங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர் பிரதேச செயலாளரிடம் சென்றால் நாங்கள் அனுமதி கொடுக்க வில்லை என தெரிவிக்கின்றார்.

எனவே பிரதேச செயலாளர் அங்கள் இருக்கின்றார் கிராம சேவகர் இருக்கின்றார் இராணுவமுகாம், வனபரிபாலன திணைக்களம் இருக்கின்றது இவைகளுக்கு தெரியாமல் இந்த வனப்பகுதியில் வீடுகட்ட பொருட்கள் விமானத்திலா கொண்டுவந்தது வீடுகட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நாங்கள் 42 நாட்களாக சிறியோர் தொடக்கம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். அரசாங்க அதிபர் இதுவரை வரவில்லை பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் 2 தடவை வந்தாh.; இந்த கிழமை; வாரகிழமை பிரச்சனை முடியும் என்றார் ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான முடிவும் இல்லை அபோல அரசியல்வாதி வந்தார்கள் ஜனாதிபதியுடன் பிரமதருடன் காணி அமைச்சருடன் பேசுகின்றோம் என்;றனர் இதுவரை எங்களுக்கு தகலும் கிடைக்கவில்லை.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள் ஆனால் எதிர்வரும் காலங்களில் வாக்கு கேட்டு எங்கள் முன் எவ்வாறு வரப்போகின்றார்கள் என பார்ப்போம். எனவே நாங்க வாழ்ந்த பூர்வி இடம் எங்களுக்கு வேண்டும் என்றனர் இதனை செவிமடுத்து மாவட்ட இணைப்பாளர் த.சுரேஷ; இது தொடர்பாக எமது தலைவரிடம் தெரிவித்து இதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதுடன் நாங்களும் இது தொடர்பாக பல்வேறு மட்டத்திற்கு எடுத்து செல்வோம். எனவும் மக்கள் போராட்டம் வெற்றி பெறும் அதுவரைக்கும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளை செய்வதாக தெரிவித்தார்