மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வீடுடைத்து கொள்ளையிட்ட 8 பேர் கைது!

breaking

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல் பிரிவிலுள்ள செட்டிபாளையத்தில் உள்ள வீடடை உடைத்து 31 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலச்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட 4 பேர் மற்றும் களவு பொருட்;டகளை வாங்கி 4 பேர் உட்பட 8 பேரை நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் கார் ஒன்றையும் மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு செட்டிபாளையத்திலுள்ள வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 31 பவுண் தங்கநகைகள், 2 இலச்சம் ரூபா பணம், இரண்டு டிஜிற்றல் கமாராக்கள், கொள்ளையடிக்கப்பட்டதாக வீட்டு உரிமையாளர் சிறிலங்கா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் வெதிரிசிங்க , பொலஜஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸ், உதவி பொலஜஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறி ஆகியோர்pன் வழிகாட்டலின் கீழ் சிறிலங்கா காவல் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தனாவின் தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையர்களை அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத: கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் கைப்பற்றியதுடன் கொள்யைடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அக்கரைப்பற்று ,ஓட்டுமாவடி பகுதியில் உள்ள தங்கநகைக்கடைகளில் விற்பனை செய்த நிலையிலும் ஏனையவை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குஎ ,அக்கரைப்பற்று, கல்முனை பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன். இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறையினர்தெரிவித்தனர்.