ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா சுவராஜ்.!

breaking
ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இதில், உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம்  அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் அனைத்து தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து சுஷ்மா பேசினார். நேற்று பல்வேறு நாடுகளின் தலைவர்களை சுஷ்மா சந்தித்தார். மொராக்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீர் பவுரிட்டா, ஐரோப்பிய யூனியன் அமைப்பின் வெளியுறவுத் துறை உயர் பிரதிநிதி பிரடெரிக்கா மொகரினி, லைச்டென்ஸ்டென் வெளியுறவுத் துறை அமைச்சர் அயுரெலியா பிரைக், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் க்யாவாலி, ஸ்பானிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் போரல், கொலம்பியா வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் ஹோல்மஸ், ஈக்குவடார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் வேலன்சியா, ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் மாரிஸ் பேனி, மங்கோலியா வெளியுறவுத்துறை அமைச்சர் டாம்டின் ஆகியோரை அடுத்தடுத்து சுஷ்மா சந்தித்து பேசினார்.நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் க்யாவாலியுடன், சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.