காவல்துறை மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேரணை

breaking
  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் காவல்துறை மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிரக்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆகியோரை கொலை செய்தவற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை. எனவே நல்லாட்சி அரசாங்கத்தால் அது குறித்த செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம், அரசியல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியாதென்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.