அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்: கை விரிக்கும் சட்டமா அதிபர்

breaking
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமை மற்றும் காலதாமதம் குறித்து உடனும் கவனம் செலுத்துவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள்  நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாரிய குற்றங்களின் பெயிரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் எனச் சுட்டிக்காட்டிய சட்ட மா அதிபர் அவர்களை விடுவிப்பது கடினமாக காரியம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இச் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனிடம் இருந்து அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை சட்டமா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது