Take a fresh look at your lifestyle.

உயி­ருக்கு ஆபத்து என்­ப­தற்­காக மக்­களை சந்­திக்­காமல் இருக்கமாட்டேன் ; மஹிந்த

கத்­தோ­லிக்க சமயத்­தையும் நாட்டின் மத ஒரு­மைப்­பாட்­டையும் சீர்­கு­லைக்கும் வகை­யில் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர கத்­தோ­லிக்க சமய திருச்­சபைத் தலை­வரின் கருத்­தை விமர்­சித்­துள்ளார். இவ்­வி­ட­யத்­துக்கு நிதி­ய­மைச்சர் பகி­ரங்­க­மாக மன்­னிப்புக் கோர வேண்டும் என ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

நிதி­ய­மைச்­சரின் கருத்து தொடர்பில் இது­வரை அர­சாங்கம் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களையும் மேற்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்­சரும் எவ்­வி­த­மான கண்­டனங்­க­ளையும் தெரிவிக்க­வில்லை. ஆகவே நிதி­ய­மைச்­சரின் கருத்து அர­சாங்­கத்தின் கருத்தோ என்ற சந்­தேகம் தோற்றம் பெற்­றுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மனித உரி­மைகள் தொடர்பில் குறிப்­பிட்ட கருத்தை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் தளத்தில் விமர்­சிக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இது குறித்து கத்­தோ­லிக்க சபையின் முக்­கி­யஸ்­தர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

இச் சந்­திப்பு நேற்று விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ­பக் ஷவின் இல்­லத்தில் இடம்­பெற்­ற­துடன் இதன் பின்னர் ஊடக சந்­திப்­பை நடத்தி விளக்­க­ம­ளிக்­கப்­பட்­ட­போதே மஹிந்த ராஜ­பக் ஷ இதனைக் குறிப்­பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தேசிய அர­சாங்­கத்தில் மக்கள் மீதான தாக்­கு­தல்­களும் சமயங்கள் மீதான தாக்­கு­தல்­களும் சாதா­ர­ண­மா­கவே இடம்பெறு­கின்­றன.தேசிய நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் இவ்­வா­றான செயற்­பாட்டின் கார­ண­மாக அவை தோல்­வியையே சந்­திக்­கின்­றன. நிதி­ய­மைச்­சரின் கருத்­தா­னது கண்­டிக்­கத்­தக்­கது. இவ்­வி­ட­யத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் பொறுப்­பற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றன.

இன்று நாட்டில் தீர்க்­கப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அவ்­வி­ட­யங்­களில் அர­சாங்கம் கவனம் செலுத்­தாமல் ஒரு பிரச்­சி­னை­யை உரு­வாக்கி முக்­கிய விட­யங்­களை மூடி மறைக்­கின்­றது. தற்­போது பொரு­ளா­தாரம் பாரிய பின்­ன­டை­வை எதிர்­கொண்டு வரு­கின்­றது. அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கை ரூபாவின் பெறு­மதி தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. இந்­நி­லை­மை­யை எவ்­வாறு சீர்செய்­வது என்று நான் அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன். ஆனால் இது­வ­ரையில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சாங்­கத்தை எம்­மிடம் பொறுப்­ப­ளித்தால் ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­யைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வருவேன். அத்­துடன் தேசிய பாது­காப்பு மற்றும் தனி­ம­னித பாது­காப்­பை உறு­திப்­ப­டுத்த முடியும். இன்று நாட்டின் தலை­வ­ரது உயி­ருக்கே அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. அந்தள­வுக்கு தேசிய பாது­காப்பு பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது. தற்­போது என்­னையும் என் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் கொலை செய்யும் சதித்திட்­டங்கள் இடம்பெற்­றுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ட­யத்தில் அர­சாங்­கத்தின் முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கைகள் என்ன?

கடந்த அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­பி­னரைக் கொலை செய்யும் சதித்திட்­டங்கள் கடந்த காலங்­களில் இடம்பெற்­றன. ஆனால் அவை பெரி­ய­ளவில் பேசப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது நாட்டின் தலை­வரைக் கொலை செய்யும் சதித்­திட்டம் அர­சாங்­கத்தின் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­து­வதால் அவை பெரி­ய­ளவில் பேசப்­ப­டு­கின்­றன.

ஆனால் எந்த வகையில் உண்­மைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும் என்­பது சந்­தே­கத்­துக்கி­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. இன்று எனது பாது­காப்பு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக காணப்­ப­டு­வ­தா­கவும் விரைவில் பாது­காப்­பை பலப்­ப­டுத்­து­மாறும் எமது பாது­காப்பு அதி­காரி அர­சாங்­கத்­துக்கு அறிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்துள்ளது என்ற காரணத்துக்காக மக்களை ஒரு போதும் சந்திக்காமல் இருக்க மாட்டேன். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகிடைக்கும் வரையில் தொடர்ந்து போராடு வேன். இராணுவத்தினரது உரிமைகள் இன்று மழுங்கடிக்கப்பட்டு ள்ளன. காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ அதி காரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அரசாங் கம் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்றார்.

குறிப்பு:>