Take a fresh look at your lifestyle.

மாவீரரை இம்முறை நினைவு கூரத் தடை: இராணுவத் தளபதி திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப் பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும், இது விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பு இம்முறை விழிப்பாகவே இருக்கின்றது என்றும் ஶ்ரீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

ஶ்ரீலங்கா இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஜயசிறிவிகாரையில் நேற்று விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது. இராணுவத் தளபதி உட்பட இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஆன்மீக வழிபாடு முடிவடைந்த பின்னர், வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப் பதற்குஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்னவென்று பிராந்திய ஊடகவியலாளர்கள் இராணுவத் தளபதியிடம் வினவினர்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மாவீரர் தினத்தை மட்டுமல்ல புலிகளை நினைவுகூரும் எந்த வொரு நிகழ்வையும் நடத்த இடமளிக்கமுடியாது. இதுவிடயத்தில் விழிப்பாகவே இருக்கவேண்டும். எனினும், எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரமுடியும் என்றும்கூறினார்.