Take a fresh look at your lifestyle.

நாலக சில்வாவைக் கொல்லச் சதி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

ஶ்ரீலங்காவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை, கொலை செய்வதே, இந்தச் சதித் திட்டத்தின் சூத்திரதாரிகளுக்கு இப்போது உள்ள சிறந்த வாய்ப்பாகும்.

அதன் மூலமே, அவரிடம் உள்ள இரகசியங்களை மெளன மாக்க முடியும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.