Take a fresh look at your lifestyle.

9 ஆண்டுகளாக நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதி: கேப்பாபிலவு மக்கள்

எங்கள் சொந்த நிலத்தில் பயிர் செய்து வாழும் உரிமை கடந்த ஒன்பது வருடங்களாகப் பறிக்கப்பட்டு நாங்கள் தெருவில் விடப்பட்டுள்ளோம் என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவுப் பகுதியில் ஶ்ரீலங்கா படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த 593 நாள்களுக்கு மேலாகக் கேப்பாப்பிலவு இராணுவமுகாம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக் கையில் –

ஶ்ரீலங்கா அரசுக்கு எதிராகவோ அல்லது இராணுவத்துக்கு எதிராகவோ நாங்கள் போராடவில்லை. நாங்கள் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்த எங்கள் வீடு வாசல்களையும் எங்கள் நிலங்களையும் தான் கேட்கின்றோம். கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் எமது வாழ்விடங்களையும் வயல் வெளிகளையும் விட்டு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் இன்று வரை எங்கள் நிலம் விடுவிக்கப்படவில்லை.

தற்போது காலப்போகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களில் விவசாயிகள் ஈ டு பட் டு வருகின்றனர். ஆனால் எங்கள் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இம்முறை விடுவிக்கப்பட்டு நாங்கள் பயிர்செய்கை மேற்கொள்ளமுடியும் என்று நம்பியிருந்தோம். ஆனால் எங்கள் நிலம் விடுவிக்கப்படவில்லை. எங்கள் நிலத்தில் பயிர் செய்து வாழும் உரிமை ஒன்பது வருடங்களாக பாறிக்கப்பட்டுள்ளது” என்றனர்.