Take a fresh look at your lifestyle.

கொமாண்டோ அணி விவகாரம்; விசாரணைகள் தீவிரம்

ஶ்ரீலங்காவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளைக் கொண்ட, கொமாண்டோ அணி ஒன்றை அமைக்க அனுமதி கோரப்பட்டமை குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னதாக இது பற்றிய அதிகாரபூர்வ கோரிக்கை நாலக சில்வாவினால், முன்வைக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி லத்தீப், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளித்திருந்தார்.

மினி யூஸி மற்றும் எம்.பி- 5 போன்ற நவீன துப்பாக்கிகளைக் கையாளும் வகையிலான கொமாண்டோ அணி ஒன்றுக்கு பயிற்சி அளிக்குமாறு சிறப்பு அதிரடிப்படையிடம் கோரப்பட்டது. அதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி அளித்திருந்த போதிலும், தமது ஆயுதங்களைக் கொண்டு அத்தகைய பயிற்சிகளை அளிக்க சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

எதற்காக கொமாண்டோ அணியை உருவாக்க நாலக சில்வா திட்டமிட்டார் என்ற கோணத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசார ணை களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு:>