முல்லைத்தீவில் சர்வதிகாரம் செய்யும் வனவள திணைக்களம்: மக்களின் 100 ஏக்கர் காணி அபகரிப்பு

breaking
  வன­வ­ளத் திணைக்­க­ளத்­தின் காணி­ப­றிக்­கும் பட­லம் முல்­லைத்­தீ­வில் தொடர்த வண்­ணமே உள்­ளது. தற்­போ­தும் 100 ஏக்­கர் தமி­ழர் காணி­களை அப­க­ரித்து எல்­லை­யி­டப்­பட்­டுள்­ள­ளது என்று மக்­க­ளால் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்ளது. இத­னால் 40 குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் முடக்­கப்­பட்டு அவர்­கள் நிர்­க்க­தி­யா­கி­யுள்­ள­னர். முல்­லைத்­தீவு, செம்­மலை புளி­ய­மு­னைப் பகு­தி­யில் உள்ள மக்­க­ளது தோட்­டக் காணி­களே இவ்­வாறு அப­ரிக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நாயாறு கொக்­குத்­தொ­டு­வாய் முதன்மை வீதி­யின் மேற்­குப் புற­மாக உள்ள புளி­ய­மு­னைப் பகு­தி­யில் உள்ள சுமார் 720 ஏக்­கர் காணி­கள் 1972 ஆம் ஆண்­டு­க­ளில் செம்­ம­லை­யில் உள்ள 350 மக்­க­ளுக்குப் பயிர்ச் செய்­கைக்­கென அர­சால் வழங்­கப்­பட்­டது. அன்­றி­லி­ருந்து அந்த மக்­கள் அந்­தக் காணி­க­ளில் வயல் மற்­றும், கச்­சான், சோளம் போன்ற உப உண­வுப் பயிர்ச் செய்­கை­யி­லும் ஈடு­பட்­ட­னர். போர் இடம்­பெற்ற காலத்­தில அங்கு பயிர் செய்ய முடி­யா­மல் அந்­தக் காணி­கள் விடப்­பட்­டன. எனி­னும் போரின் பின்­னர் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக காணி­க­ளின் ஒரு பகு­தியை துப்­பு­ரவு செய்த மக்­கள் அங்கு கச்­சான் சோளம் போன்ற உப உண­வுப் பயிர்ச் செய்­கையை மேற்­கொண்­ட­னர். எனி­னும் கடந்த வாரம் குறித்த பகு­திக்­குச் சென்ற வன­இ­லா­காத் திணைக்­க­ளத்­தி­னர் அந்­தக் காணி­கள் வன­வ­ளத்­துக்­குச் சொந்­த­மா­னவை என்று தெரி­வித்து காணி­களை அடை­யா­ள­பப்­ப­டுத்தி பெயர்ப் பலகை நட்­டுள்­ள­னர். காணி­க­ளுக்­குள் அத்­து­மீ­று­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் மக்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர். இத­னால் அந்­தக் காணி­க­ளுக்­குச் சென்று பயிர்ச் செய்­கை­யில் ஈடு­ப­ட­மு­டி­யா­துள்­ளது என்­றும் காணி­களை மீட்­டுத் தரு­மா­றும் பாதிக்­கப்­பட்ட மக்­கள் பல­ரி­ட­மும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் ”உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக விவ­சா­யம் செய்­ய­மு­டி­யாது இருந்­தது. பின்­னர் கடந்த 2015 ஆம் ஆண்டு கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­ல­கம் ஊடாக காணி­க­ளுக்­கான உறு­தி­ப­டுத்­தல் கோரப்­பட்­டது. அத்­து­டன் முன்­னர் விவ­சா­யம் செய்த 350 குடும்­பங்­க­ளில் 270 குடும்­பங்­கள் வரை­யில் காணிக் கச்­சேரி ஊடாக காணி­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டன. அன்று முதல் 3 ஆண்­டு­க­ளாக நாங்­கள் எமது காணி­க­ளில் கச்­சான் பயி­ரிட்­டுள்­ளோம். அந்­தக் காணி­க­ளில் இந்த முறை பயிர்ச் செய்கை செய்ய எண்­ணி­னோம். எனி­னும் வன­வ­ளத்­தி­ணைக்­க­ளத்­தி­னர் எமது காணி­க­ளுக்­குச் செல்ல தடை­வி­தித்­துள்­ள­னர். சுமார் 100 ஏக்­கர் காணி­க­ளுக்கு இவ்­வாறு அறி­வித்­தல்­களை அவர்­கள் வழங்­கி­யுள்­ள­னர். அத்­து­மீ­றிச் சென்­றால் சட்ட நட­வ­டிக்கை எடுப்­பார்­கள் என்­றும் எச்­ச­ரித்­துள்­ள­னர். எமது வாழ்­வா­தா­ரக் காணி­களே அவை. அவற்றை மீட்­டுத் தர அனை­வ­ரும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன், கரை­து­றைப் பற்­றுப் பிர­தேச செய­லர் உள்­ளிட்ட வர்­க­ளுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம்” என்று மக்­கள் தெரி­வித்­த­னர். மக்­க­ளு­டைய காணி­கள் தான் அவை என்று என்­னால் கூற­மு­டி­யும், மக்­கள் தங்­க­ளது காணி­களே அவை என்­ப­தற்­கான போமீற்­களை என்­னி­டம் காட்­டி­யுள்­ள­னர் சிலர் நாளை( இன்று தரு­வ­தாக் கூறி­யுள்­ள­னர். நான் நேரில் சென்று பார்­வை­யிட்­டேன். காணி­க­ளில் கச்­சான் பயி­ரிட்­ட­தற்­கான அடை­யா­ளங்­கள் ஏரா­ளம் உள்­ளன. சிறிய பற்­றை­கள் வளர்ந்­த­வு­டன் அது வன­வ­ளம் என்று கூறியே வன­வ­ளத்­தி­னர் காணி­க­ளுக்கு எல்­லை­யிட்­டுள்­ள­னர். வன­வ­ளத்­தி­ன­ரு­டைய இத்­த­கைய செயற்­பா­டு­கள் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். முல்­லைத்­தீ­வில் அவர்­க­ளு­டைய இராச்­சி­யம்­தான் நடக்­கி­றது. மகா­வலி எல்­வ­லை­யத்­தில் எங்கோ உள்­ள­வர்­களை கொண்­டு­வந்து இங்கு குடி­ய­மர்த்த முடி­கி­றது என்­றால் தமி­ழர்­க­ளு­டைய சொந்­தக் காணி­களை அவர்­க­ளுக்கு கொடுப்­ப­தில் என்ன பிரச்­சி­னை­யி­ருக்­கிற என்று எனக்­குத் தெரி­ய­வில்லை . அந்­தக் காணி­க­ளுக்­குச் சென்று பார்க்­கு­மாறு பிர­தேச செய­ல­ரைக் கோரி­யுள்­ளேன். அவர் இந்­தியா சென்­றி­ருப்­ப­தால் வந்­த­வு­டன் இது தொடர்­பில் கதைப்­ப­தா­கத் தெரி­வித்­தார். தமிழ் தலை­வர்­கள் இந்த விடை­யத்­தில் கூடிய கவ­னம் எடுத்து மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­கள் திட்­ட­மிட்­டுப் பறிக்­கப்­ப­டு­வது தொடர்­பில் பேசி உரிய தீர்வு காண­வே­ண­டும். அந்த மக்­க­ளைப் போன்று மேலும் மக்­க­ளு­டைய காணி­கள் அக­ப­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார்.