விக்கினேஸ்வரனை தெரிவு செய்ததை எண்ணி புலம்பும் மாவை

breaking
  விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இன்று மாலை ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகல்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் பிரச்சனை தொடர்ந்து கொண்டே செல்கின்றது நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம் இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொம்பனி நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் காரசாரமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார்.நாங்கள் விரைவில் வருவோம். சுமந்திரன் அவர்கள் இடைக்கால அறிக்கை பற்றி சொன்னார் இடைக்கால அறிக்கை ஒரு அரசியல் தீர்வில் முழுமையானது அல்ல இந்த நாட்டில் இனப்பிரச்சனை தீர்வு உட்பட தேர்தல் முறை ஜனாதிபதி முறை எல்லாம் உள்ளடக்கப்பட்டு ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் பாராளமன்றில் ஏகமனதாக தீர்மானித்தார்கள். அதன்பின்னர் அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு எங்கள் சார்பில் சம்மந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் அதில் அங்கம் வகிக்கின்றார்கள். எவ்வளவோ போராட்டங்களின் மத்தியில் இணக்கங்கள் காணப்பட்ட விடயங்களும் இன்னும் மேம்படுத்தப்படவேண்டிய விடயங்களும் இடைக்கால அறிக்கையில் காணப்பட்டது அது முழுமையாக எங்களின் தீர்வினை பிரதிநிதித்துவபடுத்துவது அல்ல எடுக்கும் முயற்சிகளில் ஒரு கட்டத்தை அண்மிக்கின்றார்கள். இன்று ஒருமித்த நாடு என்பதுதான் அங்கு இருக்கும் விசயமாகும் ஏக்கராச்சியா என்பதற்கு சமமான தமிழ் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது ஒஸ்லோ அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களை இன்று நாங்களும் பின்பற்றி வருகின்றோம். ஒருமித்த நாடு ஒரு சமஸ்டி தன்மையினை கொண்டது இந்த இடைக்கால அறிக்கை வரலாற்றில் முதன்முறை ஏழு சிங்கள முதலமைச்சர்கள் முழு அதிகாரங்களும் பகிரப்படவேண்டும் சட்டம் ஒழுங்கு நில அதிகாரம் நிதி அதிகாரம் கொடுத்த அதிகாரங்கள் மீறப்படமுடியாது நில அதிகாரங்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம் அது இன்னம் முன்னேற்றப்படவேண்டும். இவ்வாறு ஒருமித்த நாட்டிற்குள் இந்த அதிகாரங்கள் பகிரப்பட்டு திருப்பி எடுப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமல் முந்தைய ஒற்றை ஆட்சியாட்சியின் கீழ் 13 திருத்தச்சட்டத்தின் கீழ் வந்த அதிகாரங்களை திருப்பி பெறலாம் ஆனால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் அப்படி செய்யமுடியாது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தில் உள்ள ஏழு முதலமைச்சர்கள் அவர்களே சொன்னார்கள் அதிகாரங்களை முழுமையாக பகிர் என்று அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்த தவறக்கூடாது என்பதன் மறுபக்கம் தான் அது. கஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள் இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள் ஏன் அப்படி சொன்னார்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பினால் இந்த பிரச்சனையினை தீர்வு காண்டுவிடக்கூடாது பேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார் அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார் அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார். நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம் சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல இனப்பிரச்சனைக்கான தீர்வு முழுமையானது அல்ல அதில் சில இணக்கமாணவைகள் இருக்கின்றன இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்கவேண்டும் இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் அதனைஅரசியல் அமைப்புக்கு பொதுத்தமானது என்று ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம். அந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்கவேண்டும் அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம் நிலங்கள் விடுவிப்பது கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம். நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம் நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆழுகின்ற உரிமை இருக்கவேண்டும் நாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை மந்திரிபதவி என்றால் நாங்களும் அரைமந்திரி குறை மந்திரி என்று பொறலாம் எதுவும் கேட்கவில்லை இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் மகாவலி போன்ற திட்டங்களை நாங்கள் நேரடியாக சொன்னோம் அது இப்போ நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பதந்தம் செய்யவில்லை உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள் அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? இந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி? ஆக சம்மந்தனை பற்றி,சுமந்திரனை பற்றி,என்னை பற்றி எங்கள் தலைமையினை மாற்றவேண்டும் அதுதான் முக்கியம். நாங்கள் சொல்கின்றோம் எங்களுக்கு மக்கள் அங்கிகாரம் தந்துள்ளார்கள் தேர்தல் அடிப்படையில் சொல்லியுள்ளோம் இந்த அடிப்படையில்தான் அரசியல் தீர்வு வரவேண்டும் போரினால் எங்கள் தேசம் அழிந்து போய் இருக்கின்றது மக்கள்மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களை மீளகட்டி எழுப்பவேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்லி இருக்கின்றோம் . நாங்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்கவேண்டும் அதற்காக இந்த ஆண்டிற்கு பிறகும் அல்ல சிலதிட்டவட்டமான பேச்சுக்களை இந்த அரசாங்கத்துடன் பேசவேண்டும் எங்கள் தலைமையினை மாற்றவேண்டும் ஒரு புதிய தலைமையினை கொண்டுவரவேண்டும் என்று ஆழாக அடிபட்டு திரிகின்றார்கள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சனை இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டி வரும். எங்கள் மாகாணத்ததை கூட்டவேண்டி வரும் நேரடியாக கட்சிகளோடு பொது அமைப்புக்களோடு சிவில் அமைப்புக்களோடு இந்த அரசாங்கத்தின் நிலமை இது எங்களின் நிலமை இது அதற்கு அடுத்த கட்டத்தை தீர்மானிக்க பேச்சுக்கள் நடத்த தயாராக இருக்கின்றோம் அதே இடத்தில் ஜ.நா மனிதஉரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானம் அதில் சம்மந்தப்பட்ட இராஜ தந்திரிகளுடன் எங்கள் தலைவர்கள் பேசுகின்றார்கள்.இங்கே வருகின்ற இராயதந்திரகளுக்கு சொல்லி வருகின்றோம் இந்த அரசாங்கத்துடன் செல்லமுடியாத நிலமை ஏற்படுமானால் நாங்கள் எங்களின் இலக்கினை நோக்கி தீர்மானம் எடுப்பதற்கு நீங்கள் உதவியாக இருக்கவேண்டும் என்று மறைமுகமாக நாங்கள் சொல்லி இருக்கின்றோம். இதனை நாங்கள் செய்யாமல் எல்லாவற்றையும் நாங்களே தூக்கி வீசிவிட்டு அடுத்தகட்டம் என்ன என்று தெரியாமல் சொல்லாமல் அதற்கான திட்டங்களை வகுக்காமல் நாங்கள் ஒரு தவறை விடமுடியாது நாங்கள்தான் பிழை விட்டுவிட்டோம் அரசு ஆயத்தமாக இருந்தது இன்றும் றாஜபக்ச சொல்லுகின்றார் தான் இருந்த காலத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் இப்போது நாமலும் அவரும் சேர்ந்து பாடுகின்றார்கள் நாங்கள் மன சேர்வு அடையாமல் தைரியத்துடன் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் கலந்துரையாடி இந்த அரசு பிளைத்தால் சிலப்பதிகாரத்தில் சொன்னது போல அரசியல் பிளைத்தால் அறமே கூற்றாகும் பாண்டிய மன்னனுக்க வந்த கதி அதனை நோக்கி இந்த அரசு செல்லுமாக இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.