வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் புது எழுச்சியுடன்!

breaking

கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் வட கிழக்கு பகுதிகளில் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பங்களின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களாக மட்டக்களப்பு தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லங்கள் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் திருமலை ஆலங்குளம், செம்பிமலை மாவீரர் துயிலுமில்லம் என 7 துயலுமில்லங்களில் சிரமதானப்பணிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுவந்த சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் வாகரை பிரதேச பொறுப்பாளர் மேனிகன்.

இன்று நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களில் ஒன்றான வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணியை முன்னெடுக்கின்றோம் அந்தவகையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணியும் இதர வேலைகளும் அப்பிரதேசத்திற்கு என உருவாக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரினால் நடைபெற்றன அதனடிப்படையில் இன்று வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி எமது தேசத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர் செல்வங்களுக்கான அஞ்சலியினை மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு எமது குழு மற்றும் தேசத்தின் வேர்கள் அமைப்பு முன்னால் போராளிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் எமக்கு உறுதுணையாக உள்ளனர் அதனால் இம்முறை மிக எழுர்ச்சியாக நடாத்த எதிர்பார்த்துள்ளோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என அவர் கருத்துத்தெரிவித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.