TNA உடன் கைகோர்க்கும் JVP இரு தலைவர்கள் சந்திப்பு!

breaking
எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் அவர்களை ஜே.வி.பியின் தலைவரான நாடாளமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்சநாயக்காவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை நடைபெற்றுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும் அரசியல் சாசனம் பின்பற்றப்படவேண்டும்,அரசியல் சாசனத்தினை மீறி எந்த செயலிலும் ஈடுபடமுடியாது அண்மையில் நடைபெற்ற பதவிநீக்கம் பதவி ஏற்பு என்பன அரசியல் சாசனத்திற்கு மாறானவை இது மக்களின் இறையாண்மையினை இல்லாமல் செய்கின்றது ஜனநாயகத்தை இல்லாமல் செய்கின்றது இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது இதனை எதிர்க்கவேண்டியது தடுக்கவேண்டியது எங்களின் கடமை இதனை நாங்கள் தவறமாட்டோம். பாராளமன்றத்தினை ஒத்திவைத்துவிட்டு பாராளமன்ற உறுப்பினர்கள் விலைகொடுத்து வாங்கப்படுகின்றார்கள் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது இவ்வாறான செயல்கள் தீவிரம் அடைந்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்கமுடியாது அதனை நாங்கள் எதிர்க்கின்றோம் அதுதான் எங்கள் நிலைப்பாடு என்றும் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.