பேரத் தொகை கிடைக்காததால் கூட்டமைப்பின் மீது சரமாரியாக குற்றம் சுமத்தும் வியாழேந்திரன்

breaking
  ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஐ.தே.க சார்பு வர்த்தகர்கள் சிலர் இதற்கு முன்வந்துள்ளதாக வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவல்களை தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளாராம். தான் வெளிநாட்டில் இருக்கும் போது தன்னிடம் ஐ.தே.க கட்சியின் முக்கிய வர்த்தகர் ஒருவர் இவ்வாறான பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் பணப்பரிமாற்றம் எவ்வாறு உங்களுடன் மேற்கொள்வது எனவும் தன்னைக் கேட்டதாகவும் வியாழேந்திரன் கூறியுள்ளளார். தனக்கு வந்த இந்த தகவல் தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தரை தான் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அப்படி சொல்லியிருந்தால் அது தொடர்பாக நீங்கள் எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் மகிந்த தரப்புடன் எந்தத் தொடர்பும் வைக்க கூடாது என தன்;னிடம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் கூறினார் எனவும் வியாழேந்திரன் தனது நட்பு வட்டாரங்களுக்கு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் உள்ளவர்கள் எவரும் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பது தமிழ்மக்களின் நன்மைக்காக அல்ல எனவும் முற்று முழுதாக தங்களது நன்மைக்கே என்றும் அத்துடன் தாங்கள் மகிந்த பக்கம் சாய்ந்தால் ஒருபோதும் தமிழ் மக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்தை கருதியே கூட்டமைப்பு எம்.பிக்ககள் சிலர் ரணில் கொடுத்த பணத்துடன் மூச்சு விடாமல் இருக்கின்றார்கள் எனவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலையை வைத்து தமிழ்மக்களுக்கான எந்தவொரு நன்மையையும் ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளாராம். ஏனெனில் ரணிலிடம் பணம் வாங்கிய பின்னர் அவர்கள் தமிழ்மக்களுக்காக எந்த அழுத்தத்தையும் கொடுப்பதற்கு முயற்சிக்கமாட்டார்கள் என்றும் வியாழேந்திரன் கூறியுள்ளாராம். இதே வேளை வியாழேந்திரன் கட்சி மாறியதற்கு 30 கோடிரூபாக்கள் மகிந்த தரப்பால் வியாழேந்திரனுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக நம்பரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதி வழங்கப்பட்டவாறான கொடுப்பனவு வழங்கப்படாதமையால் தற்போது கடுமையான சீற்றத்தில் அவர் உள்ளதாக சொல்லப்படுகின்றது.