மன்னாரில் காணி வழங்கியமைக்கு மக்கள் எதிர்ப்பு

breaking
மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் வெளி நபருக்கு காணி வழங்கியமை தொடர்பில் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள். மன்னார் பள்ளிமுனை பகுதியில் பல நூற்றுக்காணக்கான குடும்பங்கள் நிதந்தர காணிகள் இன்றி தவித்து வரும் நிiலியல் வெளி மாவட்டத்தினை சேர்ந்த நபர் ஒருவருக்கு காணி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் அமைதி பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். குறித்த பிரதேசத்தில் 100 காணித்துண்டு காணப்பட்டதாகவும்,அதனை அளந்து 96 காணி வழங்கப்பட்டும் 4 காணிகள் விடுபட்டும் இருந்தது இந்த காணியில் வெளிகிராமத்தினை சேர்ந்த ஒருவரை குடிமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதேவேளை ஊர் மக்களின் பொதுத்தேவைக்காக உள்ள காணி ஒன்றினை வெளி மாவட்டத்தினை சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளமைக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குறித்த பிரதேச மக்கள் காணி இன்றி காணி வழங்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள் அவர்களை சிறுநாவல் குளம் பிரதேசத்தில் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இன்னிலையில் பிரதேசத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு காணியினை கொடுக்காது வெளி மாவட்டத்தினை சேர்ந்தவருக்கு காணி கொடுத்தமைக்கு மக்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.