புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

breaking
மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றிற்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள். குறித்த பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக அகழ்வு பணியில் ஈடுபட்ட வேளை இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரி-56 வகை துப்பாக்கிகள் 4, மகசின்கள் 8 ம் 210 தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.