சம்பூர் அனல்மின் நிலையத்திற்கெதிராக மனு

breaking
சம்பூர் அனல்மின் நிலையத்திற்கெதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த எட்டாம் திகதி என்வயமென்ரல் பவுண்டேசன் லிமிட்டட் (Environmental Foundation Limited) என்ற அமைப்பே இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளது.

Sampoor2இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை சுற்றுச்சூழல் அதிகாரசபை, சக்திவள அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்வதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.