எழுச்சி கோலம் பூண்டுள்ள கேப்பாப்பிலவு மாவீரர் துயிலுமில்லம்

breaking
  தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக துயிலும் இல்லங்களில் புனரமைப்புப் பணி மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லங்களல் சீரமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள துயிலும் இல்லங்களின் முன்பாக மாவீரர் நாளை நினைவு கூறுவதற்கு ஏதுவாக பதில் இடங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதேவேளை மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் கேப்பாபிலவு மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் மாவீரர் நாள்நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலை கொண்டுள்ளதால் பதில் இடமொன்றில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கேப்பாபிலவு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு கூறுகிறது. துப்பரவு செய்யப்பட்டு காணியில், வீதிகளிலும் மஞ்சள் சிவப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டும் நிகழ்வுக்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று ஏனைய மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதேவேளை, யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.