சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் -2018 எழுச்சி நாட்கள் ஆரம்பம்

breaking
  தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று காலை 10.00மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு 2018ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளின் முதலாம் நாள் நிகழ்வுகள் சம்பிரதாயமாக ஆரம்பிக்கப்பட்டது . இதில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களின் கல்லறைகளிலும் மாவீரர்களின் சிதைவடைந்த நினைவிட சிதறல்களிலும் (நினைவிடத்திலும் ) மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பலரின் மனங்களை நெகிழவைத்தது. இங்கு மூன்று இடங்களில் மாவீரர்களன் கல்லறைகள் உள்ளன.அவையாவன 1987ம் ஆண்டு விதைக்கப்பட்ட மாவீரரின் கல்லறை துயிலுமில்ல வழாகத்தின் முன்னுள்ள கிறிஸ்தவ மயாணத்திலும் மற்றையது 1991ம் ஆண்டு துயிலுமில்லம் ஆரம்பிக்கப்படமுன் விதைக்கப்பட்ட கல்லறைகள் சாட்டி இந்து மயாணத்திற்குள்ளும் (துயிலுமில்ல வழாகத்தின் முன்னுள்ள) ஏனையவை துயிலுமில்லத்தினுள்ளும் உள்ளன. இம் மூன்று இடங்களிலும் மாவீரர்களை நினைவு கூறப்பட்டன.என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மாவீரர் நாள் 2018 பணிகளை ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவோர் தீவககோட்ட மாவீரர் பணிக்குழுவினரே ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.