கார்த்திகையின் வரமே ..

breaking
காந்தளின் பிறப்பதுவும்  காரிருளின் கரமதுவும்  கைகோர்க்கும்  காலம் கருமேகம் கிழித்தொரு கோடி மின்னல் தெறிக்கும் கோலம் . வருமந்த நினைவோடு வாய்த்த மரவீரர்  புகழ் எழுதும் ஞாலம் ... வருபகையை   வான் தொட்டு மண் நின்று அழித்த மாண்பினைப்பாடும்.. இருள்விலக்கி ஒளியேற்றும்  இரவி குலத்தோர்  இவர் என்போம் .. இரவுபகல் பாராது   மண்காத்த மாணிக்ககற்கள்  எனத் தாங்குவோம்   அருள்தரும் அன்னைக்கு இணையான தோற்றம் எனப்பெருமை கொண்டோம் அறவழியில்   போரிட்ட புறநாநூற்று வீரமதை விழிகாக்கும் கண்டோம் .. வரி வரியாய் உடையணிந்த  வள்ளல்கள்  இவர்கள் பாரும் .. வரிக்குள் வரிக்கமுடியாத் திறம்   கொண்ட தினவெடுத்த  தோளும்.. தோழமை கொள்ளும் பண்பின் சிகரம் உலகை வெல்லும் திறளோர்  .. வாழும் வரை மண்ணுக்காய்  வாழ்ந்து  மண்ணுக்கே வித்தான  வித்தகர்  ... கார்த்திகையின் வரமே கருணையின்  உரமே காவல் தெய்வங்களே  .. கல்லறைக் கோயிலில் கனிந்துருகி  வேண்டும் எம் இறையோர்களே  .. காவியத்தின் செதுக்கல்களே  கவிவரியின் உயிர்  இருப்புகளே.. கா ந்தளின் மக்களே மறப்போமா  எங்களின்  இதயம் வாழ் மைந்தரே...
சிவதர்சினி ராகவன்