மாங்குளத்தில் வீடு புனரமைத்து கையளிப்பு.!

breaking

வட தமிழீழம் முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறிப்பகுதியில் காற்றினால் கூரைகள் தூக்கி வீசப்பட்டு கானப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டினைப்புனரமைத்து வழங்கியுள்ளார்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கற்குவாரிக்கிராமத்தில் சுமார்  ஐந்தரை இலட்சம் ரூபாசெலவில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினுடைய நிதியொதுக்கீடடின் கீழ் அமைத்துக்கொடுக்கப்பட்ட நிரந்தரவீடு உரிய முறையில்அமைத்துக்கொடுக்கப்படாமல் காணப்பட்டது.

கடந்த மே மாதம் வீசிய காற்றினால் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டதையடுத்து, கிராம அலுவலர மற்றும் பிரதேசசெயலாளர் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக்குடும்பத்தினால் தெரியபபடுத்தப்பட்டது.

இதனையடுத்து, தறப்பாள் ஒன்றினை வழங்கி குறித்த தறப்பாளைக்கொண்டு மேற்படி பெண்தலைமைதுவக்குடும்பம் அமைத்த கொட்டிலில்;வசித்து வந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ம்திகதி குறித்த பிரதேசத்திற்குச்சென்ற ஒருவர்,அந்த வீட்டின் நிலமை  தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அன்றைய தினம் மாலை உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அந்த குறித்த வீட்டினை புலம்பெயர் உறவான முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த கண்டா வாழ்சி.விஜிதரன் அவர்களது பிறந்த  தினத்தை முன்னிட்டு ஒளிரும் வாழ்வு அமைப்பின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரையான நிதியை செலவிட்டு கனடா   வன்னி தமிழ் கலாச்சர அமையத்தின் ஊடாக வீட்டின கூரை மற்றும் ஏனைய வேலைகளையும் முழுமையாக செய்து முடித்து இந்த வீட்டினை இன்று (26-11-2018) பிற்பகல்.  3.மணிக்கு  கையளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பா.ம.உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந்த்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்