ஆனந்தசங்கரி நலம் பெற பிக்கு நடத்திய புத்தம் சரணம் கச்சாமி...

breaking

ஒட்டுக்குழு  ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி  பேரினவாத பிக்கு  முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய ஆனந்தசங்கரியை இன்று மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நலம் விசாரித்ததுடன், விரைவில் நலம் பெற ஆசி வழங்கினார்.





சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்.