திருகோணமலை 26 மக்கள் படுகொலை முதல் முறையாக விசாரணைக்கு!

breaking
திருகோணமலையில் 26 மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் வழக்கு  நடுவர் குழு சபையினூடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. திருகோணமலை மூதூா் குமாரபுரம் கிராமத்தில்  1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற   படுகொலை தொடர்பிலான வழக்கு முதல் முறையாக நடுவர் குழு சபையினூடாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வடமத்திய மாகாண நீதவன் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த படுகொலை தொடா்பான வழக்கு எதிா்வரும் 27ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறித்த படுகொலை தொடர்பில் படை கோப்ரல்கள் நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது குறித்த கோப்ரல்கள் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில்  இவா்களுக்கு எதிராக தனித்தனியாக 121 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.