முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் தொல்பொருள் திணைக்களம்

breaking
  வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டை என்ற புராதான சின்னத்தை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஶ்ரீலங்கா தொல் பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர். வரலாற்றுச் சின்னமாகக் காணப்படும் ஆங்கிலேயர்களின் முல்லைத்தீவு கோட்டையைத் துப்பரவு செய்து, அதனை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.   முல்லைத்தீவு கோட்டை பற்றி... ஆங்கிலேயர்கள் சிறிலங்காவிற்கு படையெடுத்த போது இங்கு தமிழர் மன்னர்கள் குறுநில மன்னர்களாக அரசாட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்களில் வன்னியை ஆண்ட மன்னர் பண்டாரவன்னியன். பண்டாரவன்னியன் யாருக்கும், எதற்கும் விலைபோகாத அரசன். அவனது இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயப் படைகள் பல தடவைகள் தாக்குதல் தொடுத்தபோதிலும் அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்நிலையில், முல்லைத்தீவில் ஆங்கிலேயர் அமைத்திருந்த கோட்டையை பண்டாரவன்னியன் படை நகர்த்திச் சென்று 1803.08.25 ஆம் திகதி கைப்பற்றினான். இதன்போது ஆங்கிலேயர்கள் தரப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பண்டாரவன்னியன் படைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஆங்கிலேயப் படைகள் கோட்டையை விட்டுப் புறமுதுகிட்டு ஓடித்தப்பினர்.