யாழ், மாநகரசபையின் பாதீட்டை திருத்துமாறு த.தே.ம.முன்னணி கோரிக்கை

breaking
  வடதமிழீழ யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமைத்தில் இன்று மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த முன்னணியின் பிரதிநிதிகள், வெளிநாடு சென்று படித்து வந்தால் தான் யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றி தெரியவருமாம். இவர்களுக்குத்தான் இந்த மக்கள் தமது வாக்களித்துள்ளனர். மக்கள் படும் துன்பங்களை அறிந்தவனால் கடைசி வரையும் இப்படி பணத்தை செலவு செய்ய மனம் இடம்கொடாது. அதுதான் சொல்லுவது மக்களுடன் நின்றவர்களை சபைக்கு கொண்டுவாருங்கள் என்று. யாழ்.மாநகர சபை செலவீன மதிப்பீடு 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட சில செலவீனங்கள் வருமாறு, கடல் கடந்த பயிற்சி செலவு (முதல்வர் , உறுப்பினர்கள் ) 10, 000, 000.00 வாகன எரிபொருள் 12,000,000.00 தொலைத்தொடர்பு மற்றும் படிகள் (முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்) 10,000,000.00 வருட இறுதி நிகழ்வு 150,000.00 பொதுக்கூட்ட உபசரணை 300,000.00 முதல்வர் உபசரணை 500,000.00 தினக்குறிப்பு புத்தகம் 100,000.00 நினைவு சின்னம் வழங்கல் 100,000.00 உள்ளூராட்சி வாரம் 1,000,000.00 சட்ட ஆலோசகர் கொடுப்பனவு 500,000.00 புகையிரத ஆணைச்சீட்டு 1,500,000.00 நகர மண்டபம் , முதல்வர் வாசஸ்தலம் நிர்மாணிப்பு 125,000,000.00 ஊழியர் கடன் கொடுப்பனவு 100,000,000.00 (கொடுத்த கடன்கள் மீள் வசூலிக்காத நிலையில் புதிய கடன் கொடுப்பனவு) இவ்வாறாக யாழ்.மாநகர சபையின் மொத்த செலவீனம் 911,124,000.00 உள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவு திட்டத்தை திருத்தக் கோரியுள்ளது. என தெரிவித்தனர் .