ஹமாசுக்கு எதிரான தீர்மானம் தோல்வி :அமெரிக்காவின் முயற்சி உடைந்தது.!

breaking
ஹமாஸ் இயக்கத்தின்  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில்  32 நாடுகள் பங்கேற்கவில்லை. பொதுச் சபையில் மூன்றில் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ்  அமைப்பினர், இஸ்ரேல் பகுதிக்குள் அடிக்கடி ராக்கெட் குண்டுகளை வீசி வன்முறையை தூண்டுகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பாவி மக்கள் அதிகளவில் பலியாகின்றனர். காசா எல்லையில் சுரங்க பாதைகள் அமைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துகின்றனர் என்ற குற்றசாட்டுக்கு  ஐ.நா பொதுச் சபையில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன் நேற்று பேசிய ஐ.நா.வின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலே, ‘‘இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் 500க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பினருக்கு  செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரப்படவில்லை ’’ என பேசினார்.  இது குறித்த நிக்கி ஹேலே கூறுகையில், ‘‘ ஐ.நா உறுப்பு நாடுகள் சரியான நடவடிக்கை மேற்கொள்ள இந்த தீர்மானம் ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் இது தோல்வியடைந்து நியாயமற்றது. வேறு எந்த நாட்டின் மீதான தீவிரவாத நடவடிக்கைக்கு நாம் கண்டனம் தெரிவிக்க தயங்க மாட்டோம். ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு நாம் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலால் அதிகம் பாதிக்கப்படுவது பாலஸ்தீன மக்கள்தான்’’ என்றார். முக்கிய குறிப்பு: பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு ஹமாஸ் இயக்கம்  என்றே அவர்கள் கருதுகின்றனர் ,மேலும் இஸ்ரேல் (யூதர்கள்) கட்டவிழ்க்கும்  பாலஸ்த்தீன இனப்படுகொலைக்கு எதிர் தாக்குதல் நடத்துவது தீவிரவாதம் இல்லை