மைத்திரியால் இடித்தழிக்ப்பட்ட இரணைமடு கல்வெட்டு: அரசியல் விளையாட்டு

breaking
  வடதமிழீழ கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் காலத்­தில் திறந்து வைக்­கப்­பட்ட நினை­வுக் கல்லை நேற்­று­முன் ­தி­னம் மாலை பெக்கோ இயந்­தி­ரத்­தின் ஊடாக இடித்­த­கற்றி விட்டு, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் புதிய நினை­வுக் கல் அமைக்­கப்­பட்டு அது நேற்றுதிறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 1956ஆம் ஆண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யில் இர­ணை­ம­டுக் குளம் திறந்து வைக்­கப்­பட்­டது. அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ராக இருந்த டட்லி சேன­நா­யக்­க­வின் காலத்­தில் திறந்து வைக்­கப்­பட்­ட­மை­யைக் குறிக்­கும் வகை­யில் நினை­வுக் கல் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நினை­வுக் கல் நேற்று முன்­தி­னம் மாலை பெக்கோ இயந்­தி­ரம் மூலம் இடித்து அகற்­றப்­பட்­டது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பெயரை மாத்­தி­ரம் உள்­ள­டக்­கிய புதிய நினை­வுக் கல் பொருத்­தப்­பட்டு அது நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து கூட்டு அரசு அமைத்­தி­ருந்­தன. கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி, கூட்டு அர­சி­லி­ருந்து ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி வெளி­யே­றி­யது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வை­யும் நீக்­கி­யி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.