பிரேசிலில் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்: 12 பேர் சாவு

breaking
  பிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் பணயக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் சியரா மாநிலத்தில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதியினுள்ள நேற்றையதினம் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல் வங்கிகளுக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றதுடன் ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர். இது தொடர்பில் தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதனையடுத்து கொள்ளையர்களும பதில் தாக்குதல் நடத்தியதுடன் பொதுமக்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர். எனினும் மோதல் தீவிரமடைந்தமையினால் பணயக் கைதிகளாக பித்து வைத்திருந்தவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுசுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மோதலில் 6 பணயக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தப்பிச் சென்றுவிட்ட கொள்ளையர்களை காவலதுறையினர் தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது