மைத்திரியா? மகிந்தவா? : புதிய கூட்டமைப்பால் ஶ்ரீலங்கா அரசியலில் பரபரப்பு

breaking
  பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று இரவு இரவு 7 மணியளவில் நடைபெற்ற போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்திருந்தார். மேலும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலேயே புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்தார். இந்த புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே புதிய கூட்டணி தலைமை வகிப்பார் எனவும் அவருடைய தலைமையிலேயே தேர்தலில் போட்டியிடுவோம் என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.