தமிழர்களின் பாதுகாப்பிற்கு ஜ.நா படையினை அனுப்புமாறு கோரிக்கை!

breaking
வடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்! இராணுவத்தை அனுப்புமாறு ஐ.நா. வடக்கிற்கு அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைக்குமாறு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் அரசாங்கம் எதுவும் கிடையாது என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் கூட்டுப் படுகொலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு. ஆர்.பீ.ஆர். கொள்கையின் அடிப்படையில் வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டராஸிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடக்கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டால் ஆர்.பீ.ஆர். கொள்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் இலங்கையில் பாரதூரமான நிலைமைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் புலி அடக்குமுறை என குறித்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.