சர்வதேச மனிதஉரிமைகள் நாளில் நீதிவேண்டி போராட்டம்!

breaking
சர்வதேசத்தின் மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10 ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேசத்தில் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு ஜக்கியநாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நாளினை தாயகத்தில் உள்ள மக்கள் மிகமுக்கியமாக ஏற்று தங்கள் உரிமையினை கேரிவந்துள்ளார்கள். அந்தவகையில் 2018 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உரிமைகள் மீறப்பட்ட மக்களாக உரிமைக்காவும் உறவுக்காகவும் ஏங்கித்தவிக்கும் மக்களா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள்இகணவன்கள்இமனைவிகளை தேடி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்களில் பலர் தங்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்தவிப்பில் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. காலத்தை இழுத்தடிப்பு செய்வதன் ஊடாக இலங்கை அரசாங்கம் தங்கள் உரிமைக்காக போராடிவரும் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கசெய்து உரிமைஇசுதந்திரம்இநின்மதி இல்லாத மக்களாக மாற்றிக்கொண்டிருக்கும் கால கட்டத்தில்  டிசம்பர் 10 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியினை சொல்லவுள்ளார்கள்.