தரம் ஒன்றிற்குச் செல்லும் அன்னை ஈசுவராம்பா முன்பள்ளி சிறார்கள் மதிப்பளிப்பு.!

breaking
முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் வட தமிழீழம்  முல்லைத்தீவு - தண்ணீரூற்று, அன்னை ஈசுவராம்பா முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, 2018.12.09 ஆம் நாளன்று, அன்னை ஈசுவராம்பா முன்பள்ளியில், முன்பள்ளியின் முதன்மையாசிரியர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து இறை வணக்கம், மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரை, சிறார்களது கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதனையடுத்து எதிர் வரும் 2019ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லும் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் திரு.சி.லோகேசுவரன், திரு.சுப்பிரமணியம் - தேவராசா(ஓய்வுநிலை அதிபர்), திரு.சவரிமுத்து - யோன்சன் சதீசுக்குமார்(ஆலய போதகர்), திருமதி.சபாரத்தினம் - தவக்குமார்(மாதர்சங்க நிர்வாகி) ஆகியோருடன் முன்பள்ளி ஆசிரியர்கள், சிறார்கள், சிறார்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.