முல்லையில் எழுநூறு ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான நிலக்கடலை இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெய்த மழைவெள்ளத்தினால் அதிகளவான நிலக்கடலை அழிவடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாணவிவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் எஸ்.உலகநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளது நிலக்கடலை விவசாயிகளின் பணப்பயிராக காணப்படுகின்றது.
அண்மையில் பெண்த பெருமழை காரணமாக கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் அதிகளவான நிலக்கடலை பாதிக்கப்பட்டுள்ளது எழுநூறு ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிகக்ப்பட்டுள்ளது அங்கு நிலங்களில் நீர் நிலைகள் காணப்படுகின்றது தற்போது வழிந்தோட தொடங்கியுள்ளன இருந்தும் விவசாயிகள் நிலக்கடலை செய்கையில் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.