முத்துஜயன் கட்டு குளத்தின் நீர் மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான விவசாய நிலங்களுக்கு நீர் விழங்கும் குழங்களில் ஒன்றாக முத்துஜயன் கட்டு குளம் காணப்படுகின்றது குறித்த குளம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்திற்கான நீர்வரத்து குறைவாகவே காணப்படுகின்றது.
வன்னியில் உள்ள மாவட்டங்களில் பொரும்பாலான குளங்களின் நீர்நிலைகள் உயர்ந்த போதும் ஒப்பீட்டளவில் முத்துஜயன் கட்டுக்குளத்தின் நீர்மட்டம் உயரவில்லை நீர்வரத்து குறைவாக காணப்பட்ட போதும் இதுவரை 20 அடி நீர் வரை வந்துள்ளது.
24 அடி வரை நீர்மட்டம் உயருமாக இருந்தால் வான்பாயும் இன்னிலையில் அண்மையில் குளத்தின் வான் கதவுகளை சரிசெய்து பாக்கும் பொருட்டு கதவிகள் திறந்து பூட்டப்பட்டுள்ளன.
இன்னும் சாரியான மழை நீர் முத்துஜயன் கட்டு குளத்திற்கு கிடைக்கவில்லை அவ்வாறு கிடைத்தாலும் அடுத்த ஆண்டுக்கான சிறுபோக செய்கை மற்றும் மேட்டு நில பயிர்செய்கைக்கு போதியளவு நீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்