தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் முன்வைக்கவில்லை!

breaking

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இன்று அறிவித்தார்.

ருவான்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

” சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சி நடவடிக்கையால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. ‘ஜனநாயகம்’ என்ற விடயத்துக்காகவே இருகட்சிகளும் இணைந்துசெயற்படுகின்றன. மாறாக எந்தவொரு கட்சியுடனும் ஐ.தே.கவுக்கு இரகசிய ‘டீல்’ கிடையாது.

அதிஉயர்சபையான நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும், மக்கள் ஆணையையும் பாதுகாப்பதற்காகவே எம்முடன் கூட்டமைப்பு கரம்கோர்த்துள்ளது. மாறாக இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது . கூட்டமைப்பு தரப்பிலிருந்து நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை” என்றும் கபீர் ஹாசீம் கூறினார்.