மாவீரர்நாளில் ஒளியேற்றித் தமிழரின் இருண்ட காலத்திற்கு விடைகொடுத்திருக்கிறது ஈழத்தமிழினம்.

breaking
தமிழின அழிப்பினாலும் அவர்களது விடுதலை வேட்கையி
னை ஒருபோதும் தடுத்துவிடமுடியாது என்பதனைப் பேரெழு
ச்சியுடன் மீண்டெழுந்துள்ள தமிழர்கள், ஒன்றிணைந்து ஒரே 
குரலில் உலகுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சிங்களப் படைத்
தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகப்பகுதிகளில் உயிர் அ
ச்சுறுத்தலுக்கும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடிகளுக்கு
 மத்தியிலும் சாவுக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு மக்கள் அட
க்கி வைத்திருந்த உணர்வெழுச்சி பீறிட மாவீரர்களை 
நினைவு கூர்ந்துள்ளனர். 
வானில் இருந்து எங்கெல்லாம் குண்டுகளைப்போட்டுத்
தமிழீழத்தின் எல்லைகளை வரையறுத்த சிங்கள தேசத்திற்கு, அங்கெல்லா
ம் மக்கள் மாவீரர்களுக்கு ஒளித்தீபங்களை ஏற்றி 
வணங்கினார்கள்!
அடிபணியாத வீரத்தோடு களமாடிய வீரவேங்கைகளை வி
தைத்த அடங்காமண், துயிலுமில்லங்கள் நோக்கி மக்கள் அ
ணிவகுத்தபோது சிலிர்த்துக்கொண்டது.
தமிழர்கள் ‘தேசமாக ‘ மீண்டெழுந்ததைக் கண்டு சிங்களதேச
ம் கதிகலங்கிப் போனது. 
தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலோ
டு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக இறுமாப்போடு இருந்
த சிங்களதேசத்தின் தலையில் மீண்டும் இடிவிழுந்திருக்கிற
து. சர்வதேசமும் தமிழரின் புதிய எழுச்சிகண்டு மூக்கில் விர
லை வைத்து அதிசயித்துப் போயுள்ளது. மக்கள் மீள் எழுச்சியி
ன் முக்கியத்துவம் கருதி சர்வதேச ஊடகங்களிலும் மாவீரர்
நாள் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. 
உலகமெங்கணும் வாழும் தமிழர்களும் உணர்வுகளால் ஒன்
றாகவே வாழ்கின்றனர் என்பதனைப் பறைசாற்றுவதுபோல த
மிழகத்திலும் புலத்திலும் ஏனைய தமிழர்கள் வாழும் நாடுக
ளிலும் மாவீரர்களை நினைவுகூர அலையலையாக மக்கள் தி
ரண்டனர். உலகமெங்கணும் வாழும் தமிழர்களை, மாவீரர்க
ளின் நினைவுகள் ஒரேநாளில் ஒன்றிணைத்துவிடும் அற்புதம்
 நிகழ்ந்து விடுகிறது.
விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாதிகள் என்னும் முத்திரை
யினைக் குத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக்
கூறிச் சர்வதேச நாடுகளினது முண்டுகொடுப்புகளுட
ன் சிங்கள அரசு, அரசபயங்கரவாதத்தை ஏவி மக்களைக் கொ
ன்றொழித்தது. மக்கள் அழிவினால் விடுதலைப்புலிகளுக்கு எ
திராக மக்களின் வெறுப்புத் திரும்புமென்று சிங்கள அரசு தப்பு
க் கணக்குப் போட்டது. ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து ந
டந்ததோ வேறு! 
 
“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப்போ
ராளிகள். அவர்களே தமது உண்மையான பாதுகாவலர்; பிரதி
நிதிகள்” என்பதை ஐயத்திற்கு இடமின்றி தமிழ்மக்கள் மீண்டு
ம் சிங்கள அரசுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்
களின் உணர்வினை மதித்து சர்வதேசநாடுகள் தமது நிலைப்
பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டிய காலம் கனிந்திருக்கிற
து.
அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து படுகொ
லைகளையும் ஈவிரக்கமற்ற முறையில் குரூரமான சித்திரவ
தைகளைப் புரிந்த சிங்கள இனவாத அரசின் இறையாண்மை
யினைக் காப்பதில் கரிசனைகாட்டும் சர்வதேச அரசுகள், ஒடு
க்கப்படும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அல
ட்சியமாக நடந்து கொள்கின்றன. சிங்கள அரசினது
 மட்டுமல்ல சமாதானம் பேசவந்த நாடுகளின் முகமூடிகளும் 
இன்று கிழிந்துள்ளன.
தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தனது 2008 தே
சிய மாவீரர்நாள் உரையில், துல்லியமாகத் தொலைநோக்குப் 
பார்வையுடன்,
“ இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல புலி
களுக்கு எதிரான போரன்று. தமிழின அழிப்பை இலக்காகக் 
கொண்டபோர்; மொத்தத்தில் இது ஓர் இனவழிப்புப் போர்.
“ என்று குறிப்பிட்டார். 
ஆனால் இந்த எச்சரிக்கையைச் சர்வதேசம் கண்டு கொள்ளவி
ல்லை. இதன்விளைவு இலட்சக்கணக்கான தமிழர்கள் இனவ
ழிப்புக்கு உள்ளானார்கள். அவையவங்களை இழந்தனர்; ஆயி
ரக்கணக்கானவர் காணமலாக்கப்பட்டனர்; கொடுஞ் சிறைகளு
க்குள் தள்ளப்பட்டனர்.
இராணுவத்தீர்வில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ள சிங்கள 
அரசு,
“ தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழ
ர்தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடி
மைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்
கம்” என்றார் தேசியத்தலைவர். 
போர்முடிவுக்கு வந்து ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின்
னரும் இன்று வரை, தமிழருக்கு எந்தவிதமான தீர்வுகளையும்
 வழங்காமல் இராணுவ ஒடுக்குமுறைக்குள் தொடர்ந்தும் அட
க்கியாளுதலே அரசின் நோக்கம் என்பதை எவரும் தெளிவாக
ப் புரிந்து கொள்ளமுடியும்.
நல்லாட்சி அரசின் அரசுத்தலைவர் எனச் சொல்லப்பட்ட மை
த்திரிபால சிறீசேனா,
“வடகிழக்கு இணைப்போ, சமஷ்டியோ தனது பிணத்தின் மீது 
ஏறிச்சென்றே அடையமுடியும்” என்று இறுமாப்போடு திருவா
ய் மலர்ந்துள்ளார். 
சிங்கள ஆட்சியாளர்களின் நயவஞ்ச அரசியலை பலதடவைக
ள் தேசியத்தலைவர் அவர்கள் தோலுரித்துக் காட்டியுள்ளார், 
இருபெரும் கட்சிகளில் இருந்து, ஆட்சியாளர்களாக எவர் வந்
தாலும் தமிழரின் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. 
மாறாக தமிழரின் பிரச்சனையை வைத்தே தங்களது இனவாத 
ஆட்சியினைத் தக்கவைப்பதில் தீவிரம் காட்டுவர். 
இணக்க அரசியல் பேசி இலட்சியத்தை சிங்கள அரசிடம் அட
குவைத்து வயிறு வளர்க்கும் தமிழ்த்தலைமைகள் இனியாவ
து திருந்துங்கள்! இல்லையேல் மக்களால் விரட்டி 
அடிக்கப்படுவீர்கள்!
 
தாயகத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுகள், காணமலாக்
கப்பட்ட உறவுகளைத்தேடி நீதிவேண்டி, தாய்மார்களால், 
625 நாட்களையும் தாண்டித் தொடர்ச்சியாக நடத்தப்படும் போ
ராட்டங்கள், அரசியற்கைதிகளை மீட்பதற்காகப் பல்கலைக் க
ழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட  போராட்டங்கள் இ
வை எல்லாமே தமிழரின் உரிமைப்போராட்டத்தை இன்னும்
 உயிர்ப்போடு வைத்துள்ளன. இப்போராட்டங்கள் தனிமைப்ப
ட்டு விடாமல் இப்போராட்டங்களில் தமிழ்மக்கள் முழுமை
யான ஆதரவோடு இணைந்து கொள்ளவேண்டும்.
இனவழிப்புக்கான சர்வதேச விசாரணை, மற்றும் சுயநிர்ணய 
உரிமையின் அடிப்படையில், தன்னாட்சி அரசினை அமைத்து
க் கொள்வதற்கான வாக்கெடுப்பை, சர்வதேச நாடுகளின் ஒத்
துழைப்போடு நடத்துவது என்பது தொடர்பில் உலகத்தமிழர்க
ள் ஒன்றிணைந்து போராட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்
த வேண்டும்.
தமிழர் தாயகத்தில் தாயகக் கோட்பாட்டில் பற்று உறுதியோடு
 கொள்கையின்பால்,  கட்சிகளும் மக்கள் அமைப்புகளும்  தம
க்கிடையிலான 
முரண்பாடுகளைத் தவிர்த்து ஒன்றிணைந்து, செயற்படவேண்
டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழர்கள் ஓர் தேசிய இனம். சுயநிர்ணய உரிமையின அடிப்ப
டையில், 
தமது இறைமையினைத் தமக்கே உரித்தான  தாயகத்தில் மீள
வும் நிறுவிட அவர்கள் உரிமையுடையவர்கள் என்பதை ஐ. நா
 அவையும் உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்.
 
தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வோடும் சிந்தன
யோடும் மக்கள் உள்ளனர். தேசியத்தலைவரின் வழியில் இல
ட்சியப் பயணத்தை தொடரும் மக்களின் உறுதிப்பாடும் வெளி
ப்பட்டுள்ளது!
மாவீரர்களின் நினைவுகளும் போராட்டங்களும் கடந்தகாலத்
திற்குரியவை அல்ல. வழிபாடுகளுடனும் வணக்க நிகழ்வுக
ளுடனும் மட்டும் நாம் அவற்றைக் கடந்து போய்விடக்கூடாது
. அவர்களதும் எங்களதும் கனவுகள் மெய்ப்பட, இறுதி இலட்சி
யத்தை அடையும் வரை எமது போராட்டம் நிகழ்காலத்திற்கு 
உரியது. 
எம்மினத்தின் எதிர்கால விடுதலைவாழ்வுக்கு உரியது!
- வி மோகனதாசன்ஊடக பிரிவு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு