முதலையை மடக்கிப் பிடித்த நெளுக்குளம் காவல்துறையினர்

breaking
  வடதமிழீழம், வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்த முதலையை காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா ராசேந்திரகுளம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து இன்று காலை முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 1 மணியளவில் ராசேந்திரகுளம் அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் ராசேந்திர குளப்பகுதியிலிருந்த முதலை ஒன்று உணவு தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது. வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது முதலை ஒழிந்து நின்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெளுக்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை பொலிஸார் சென்று முதலையை மடக்கி பிடித்து காவல்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இன்று காலை முதலையை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.