உரக்கழஞ்சியம் இல்லாத நிலையில் கொக்குத்தொடுவாய் !

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால போரின்போது 1984 ஆம் ஆண்டு கொக்குத்தொடுவாய் மக்கள் தங்கள் வாழ்இடங்களை விட்டு வெளியேறினார்கள் அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது இன்னிலையில் விவசாயிகளின் சேவையினை மேற்கொள்ள கமநலசேவை நிலையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
கமநலசேவை திணைக்களத்திற்கு உரங்களஞ்சியம் இல்லாத காரணத்தால் காலபோகம்,சிறுபோம் என்வற்றிற்காக வழங்கப்படும் உரங்களை கழஞ்சியப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள கன்டனர் பெட்டிகளிலே உரங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள குறித்த கண்டனர் பெட்டிகள் இறந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தில் உர களஞ்சியம் ஒன்று கண்டிப்பாக அமைக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்