ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒளிவிழா!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஒன்றிணைத்து நடத்திய ஒளிவிழா நிகழ்வுகள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் மூக்குக்கண்ணாடி வழங்கல், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 7 பொலிஸ் நிலையங்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் வழங்கல், பொலிஸாரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிராதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்தின,பொலிஸ் அதிகாரி எஸ். பி. சேனநாயக்க, மாங்குளம், முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.