செந்தமிழ் ஈழத்தில் இருந்து சிங்கள தேசத்துக்கு ஓர் மடல்

breaking

நாற் புறமும் கடல் சூழ்ந்தும் கண் கவரும் தாய் மடியும் நிலம் நீர் காடு என்று நிமிர்வுடன் இருக்கும் ஒரு தீவு இருதேசம்

ஒரு காலத்தில் சிரித்து இருந்தவர்கள் நாங்களும் நீங்களும் இப்படி புராதன கதைகளில் மட்டுமே கேட்ட நினைவு இதில் எந்தப் பொய்யும் இல்லை புனைவும் இல்லை உங்கள் இனத்தின் மேல் நீங்கள் கொண்ட வெறியும் வேட்கையும் அதீத போக்கின் பயணப் பாதையில் எமை அடக்கி ஆள முயற்சித்த போது முடங்கி போனது அந்த உறவும் எங்கள் ஒருமைத் தன்மையும் ஒற்றுமை என்பது ஒரு போதும் ஒன்றித்து வாழ்தல் என பொருள் அல்ல உங்கள் ஆன்மத்தின் வேரில் ஏற்பட்ட பகை எங்கள் இனத்தின் அகராதியை அழித்து எழுதியது சிறுபான்மை நாங்கள் என்ற எண்ணம் உங்கள் வேரில் மட்டும் அல்ல கிளை பிஞ்சு பூ வரை ஊடுருவி உள்ளமையால் ஒற்றுமை என்பது ஒருபோதும் நடவாத காரியம் அதனால் வெடித்து இருந்த உறவின் பாலத்தில் விரிசல் விழத் தொடங்கி வெங்களம் வரை கொண்டு சென்றது அடியோடு எமை அழிக்க ஆயிரம் வழிகளில் அடக்க தொடங்கியதால் எங்கள் ஆண்மையும் பாலியல் ரீதியில் கொடுமை புரிந்தமையால் பெண்மையும் வீரியம் கொண்டு எழுந்து ஆரியம் அழித்த கதை ஆயிரம் அறிந்து இருப்பீர் வெறி பிடித்து ஒரு போதும் வேட்கை கொண்டதில்லை எங்கள் இனம் அதனால் தான் உங்கள் இனத்தின் சனத்தொகை இன்னும் சம அளவில் உள்ளது போர் முடிந்தும் எங்கள் போக்கில் மாற்றம் வந்தும் உங்கள் சிங்களத் தலைமைகள் எமை சிதைக்க மட்டுமே எண்ணி கொண்டுள்ளமை சற்று மன வருத்தம் ஒன்றே அறத்தின் பால் நாட்டம்கொண்டவர்கள் நாம் அதனால் மறத்தை கைவிட்டவர்கள் என்று பொருள் அல்ல போரியல் வல்லமை படைத்ததேசத்தின் புதல்வர்களாய் நெருப்பில் நின்றோம் மறந்து விட வேண்டாம் எங்கள் இனம் மிகவும் இரக்கம் கொண்ட இனம் சிங்கள தேசம் முதல் சிரியா வரை உணவு உடை அனுப்பியவர்கள் எங்கள் இனம் துன்பத்தில் தவித்த போது உங்கள் இனம் எதுவுமே செய்யவில்லை ஏன் உ(எ)ங்கள் அரசு கூட ஒன்றும் செய்யவில்லை சின்ன மழை நீர் வடிந்தால் கூட அங்கே நிற்பார் சனாதிபதியும் சேனாதிபதிகளும் ஆனால் இங்கே சனம் தவிக்கும் நிலை அறிக்கை கூட ஏன் அனுதாபம் கூட இல்லை. ஆனால் இனத்தின் வீரியம் எப்படி தெரியுமா? #நமக்கு_நாமே அந்த கொள்கை அடிப்படையில் அத்தனை மீட்ப்புக்கும் எங்கள் இளையோர்களும் புலம் பெயர் மக்களும் செய்த உதவிகள் எங்களை தாங்கி தூக்கி நிறுத்தி உள்ளது . உங்கள் அரசியல் இயந்திரங்கள் எங்களுக்கான உறவு பாலத்தை மீண்டும் தகர்த்து விட்டார்கள் .அதனை தெளிவாய் இந்த வெள்ளம் எடுத்து காட்டி உள்ளது . ஓர் நாடு ஓர் தேசம் எனும் போது வெட்கம் வருவதில்லையா அவர்களுக்கு உலகில் அத்தனைஅடக்குமுறைக்கும் எதிர்த்து மேல் வரும் இனம் இருப்பின் அது எங்கள் இனம் மட்டுமே எங்கள் பெரும் தூண்களாய் இருப்பது எங்கள் ஓர்மம் எங்கள் வேட்கை எண்ணம் எங்கள் பலம் ஒற்றுமைத் தன்மைகள் தான் அதனை விட புலம் பெயர் மக்களின் உதவிகள் . எங்களின் வீரியம் எங்களை பிரிக்கும் விரைவில் இப்போ புரிகிறதா நீங்கள் வேறு நாடு நாங்கள் வேறு நாடு என்பதன் உண்மை தன்மை ... .........தமிழ் சரண்.......